Archives: பிப்ரவரி 2016

ஜீவ இரத்தம்

மேரி ஏன் தேவனையும் அவர் குமாரனாகிய இயேசுவையும் விசுவாசித்தாள். ஆனால், இரட்சிப்பைக் கொடுக்க ஏன் இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார் என்பதை ஏற்றுக் கொள்ள அவளுக்குத் தயக்கம் ஏற்பட்டது. ஏதேனும் ஒன்றை இரத்தத்தின் மூலம் கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நியாயப் பிரமாணத்தின்படி, கொஞ்சம் குறைய எல்லாம் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படும். என்று வேதம் கூறுகிறது (எபிரேயர் 9:22). மேரி ஆனின் கருத்துப்படி அது அவளை வெறுப்புக்குள்ளாக்குகிறது.

ஒரு சமயம் அவள் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அவள் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை…

மேலும் வளருதல்

என் பேரனும் அவனது நண்பர்களும் டி-பந்து விளையாடுவதைப் பார்ப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியையளிக்கும். இந்த பேஸ்பால் போன்ற விளையாட்டில் அதிகம் பயிற்சி பெறாத இளம் விளையாட்டு வீரர்கள், தவறான பகுதிக்கு ஒடுவார்கள் அல்லது பந்தைப் பிடிக்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அறியாது திணறுவார்கள். பேஸ்பால் விளையாட்டையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் விளையாடும் பொழுது இப்படிப்பட்ட தவறுகள் வினோதமாகக் காணப்படாது.

இவற்றில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியடைவதே காரியம்.

என்ன செய்வதென்று அறியாமல் அல்லது எல்லாவற்றையும் மிகச் சிறந்த முறையில் செய்யத் தெரியாத நிலையில் - இவ்வாறு…

உற்று கவனித்தல்

நான் என் வீட்டின் ஓர் நிகழ்ச்சிக்காக, என் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, வரும் விருந்தினர் நான் சுத்தம் செய்தவற்றை பார்க்காமல், நான் சுத்தம் செய்யாதவற்றை மாத்திரம் பார்ப்பார்கள் என்று எண்ணி மனம் தளர்ந்து போனேன். இந்த எண்ணம் வேதாந்தரீதியாகவும், ஆத்தும ரீதியாகவும் ஓர் கேள்வியை எழுப்பியது. ஏன் மக்கள் சரியானதைப் பார்க்காதவாறு, சீக்கிரம் தவறான காரியங்களையே பார்க்கிறார்கள் என்பதே. நாம் அநேகமாக அன்பான காரியங்களை ஞாபகத்தில் வைக்காமல் கொடூரமான காரியங்களையே ஞாபகத்தில் வைக்கிறோம். குற்றங்களே நம் மனதை ஈர்க்கிறதேயன்றி தயாளமான செயல்களை…

எவ்வாறு முதுமை அடைய வேண்டும்?

இன்று எப்படி இருக்கிறீர்கள் அம்மா? என்று நான் சாதாரணமாக 84 வயதுள்ள என் சிநேகிதியை விசாரித்த பொழுது, மூட்டுக்களில் உள்ள வேதனைகளையும், வலிகளையும் காண்பித்து, “முதுமை என்பது கடினம்! ஆனால் தேவன் எனக்கு நல்லவராகவே இருக்கிறார்” என்று மெல்லிய குரலில் பதிலளித்தார்கள்.

“என் வாழ்க்கையில் முதுமை அடைவது என்பது எனக்கு மாபெரும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று “வீட்டை நெருங்கி” என்ற நூலில் பில்லி கிரகாம் கூறுகிறார். “நான் இப்பொழுது ஓர் வயது முதிர்ந்தவன். இது ஓர் இலகுவான காரியம் அல்ல என்று என்னை நம்புங்கள்.”…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சிறிய இடமானாலும் வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது.

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது.

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: அழகிய நட்சத்திரத்தின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது” என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று நாத்திகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4).

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும். 

 

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).